துருக்கியில் அறுவை சிகிச்சை செய்த பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
துருக்கியில் பட் லிப்ட் அறுவை சிகிச்சைக்குப் பின் இறந்த பிரிட்டிஷ் தாய் ஒருவரின் சில உறுப்புகள் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
38 வயதான Kaydell Brown என்ற பெண் பட் லிப்ட் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் £ 5,400 செலவழித்துள்ளார்.
துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு கிளினிக்கில் நடைமுறைகளை அவர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது
ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் துரதிஸ்டவசமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கெய்டலின் உடல் உறுப்புகளின் பகுதிகள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் ஆனால் உடல் “தீண்டப்படாமல்” ஒப்படைக்கப்பட்டதாக மருத்துவமனை கூறுகிறது.
இது குறித்து கருத்துவெளியிட்டுள்ள அவரது சகோதரி லீன், தனது சகோதரி இறந்துவிட்டதைப் பற்றி மருத்துவர்கள் தெரிவித்தபோது, பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக தன்னிடம் ஒரு கவரைக் கொடுத்ததாகவும், அடுத்த விமானத்தில் முன்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த விடயம் மிகுந்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளதுடன், வழக்கு தொடுக்க காரணமாகியது.
இதேவேளை துருக்கியில் 2019 ஆம் ஆண்டு முதல் 28 பிரித்தானியர்கள் ஒப்பனை அறுவை சிகிச்சை செய்து இறந்துள்ளதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)