நான்கு உயிர்கள் பறிபோன சோகம்!
சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன 04 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிரிபத்கொடையில் இருந்து சிலாபத்திற்கு இன்று (5) சுற்றுலா சென்ற 10 பேர் கொண்ட குழுவினர் அங்கு தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்தனர்.
இந்நிலையில் அவர்களில் 5 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். அவர்களில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து காணாமல் போன ஏனையவர்களை தேடும் நடவடிகையில் காவல்துறையினர், காவல்துறை உயிர் காப்பு பிரிவினர், கடற்படையினர் மற்றும் பிரதேச மக்களும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் காணாமல் போன நால்வரும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)





