சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த துயரம்

சிங்கப்பூரில் உணவு உற்பத்தி இயந்திரத்தில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த 23 வயது ஊழியர் பிடோக் நார்த் ஸ்ட்ரீட் 5இல் உள்ள JTC கட்டடத்தில் பணியாற்றினார்.
அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊழியர் நிலையம் தெரிவித்துள்ளது.
ஊழியர் எப்படி உயிரிழந்துள்ளார் என்பதை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
உயிரிழந்த ஊழியரின் முதலாளியைத் தொடர்புகொள்வதாக வெளிநாட்டு ஊழியர் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
ஊழியரின் உடலைத் தாயகம் அனுப்புவதற்கும் அவருடைய குடும்பத்தாருக்கு நிதியுதவி அளிக்கவும் அது உதவும் என்று நிலையம் கூறியது.
(Visited 7 times, 1 visits today)