பிரான்ஸில் மூன்று வயதுடைய சிறுமிக்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸில் மூன்று வயதுடைய சிறுமி ஒருவர் அவர் வசிக்கும் கட்டிடத்தின் நான்காவது தளத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Yerres (Essonne) நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
மருத்துவக்குழுவினர் உடனடியாக அழைக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதும், சிறுமியை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் அப்பிராந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)