குவைத் சென்ற இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
இலங்கை – தம்புள்ளை வெவலவெவ ஹம்பஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சாமினி வாசனா என்ற ஒரு பிள்ளையின் தாயார், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் குவைத்தில் வீட்டு வேலைக்காகச் சென்றிருந்த நிலையில், ஆபத்தான நிலையில் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
அவர் தற்போது தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படவுள்ளதாக அவரது உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் வெளிவராத நிலையில், விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)