பிரான்ஸில் வீடற்ற நபருக்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸில் வீடற்ற நபர் ஒருவரது சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இவ்லின் நகரில் உள்ள மேம்பாலம் ஒன்றின் கீழ் இருந்து சடலம் மீட்கப்பட்டது.
N118 சாலையை அண்மித்துள்ள குறித்த மேம்பாலத்தின் கீழே பிற்பகல் 3.30 மணி அளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் மூவரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உடற்கூறு பரிசோதனைகளின் பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும் எனவும் அறிய முடிகிறது.
(Visited 11 times, 1 visits today)