இலங்கை

இலங்கையில் சோகம் – பேருந்திற்கு காத்திருந்த மாணவிக்கு நேர்ந்த கதி

குருநாகல், உஹுமிய, டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்கு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை ஜீப் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்தார்.

அந்த விபத்தில் குறித்த பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சித்துமினி ராஜகுரு என்ற 17 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனியார் வகுப்பில் கலந்துகொள்வதற்காக குருநாகலுக்கு செல்வதற்காக பேருந்திற்காக காத்திருந்த போதே குறித்த மாணவி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

வீதியில் பயணித்த ஜீப் ஒன்று, சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல், வீதியை விட்டு விலகி, மாணவி மீது பாய்ந்து, தொலைபேசி கம்பத்தில் மோதி நின்றது.

சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!