இந்தியா

கேரளாவில் அரங்கேறிய சோகம்; மொபைல் வெடித்ததில் 8 வயது சிறுமி பலி!

மொபைல் வெடித்ததில் 8 வயது சிறுமி பலியான சம்பவம் இந்தியாவின் கேரளாவில் இடம்பெற்றுள்ளது.

கேரளா திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார் . இவரது மகள் ஆதித்யஸ்ரீ (8) மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஆதித்யஸ்ரீ நேற்று இரவு கைபேசியில் வீடியோ பார்ர்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது கைபேசி எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் மோசமான மின்கலம் காரணமாக செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

தற்காலத்தில் பொதுவாக குழந்தைகள் அதிக நேரம் கைபேசி பயன்படுத்துகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் அவர்களின் உயிரை பறித்து விடுகின்றது . எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் மொபைல் கொடுப்பதை கூடுமானவரை தவிர்த்தல் நன்று.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!