இந்தோனேசியாவில் பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் ஏற்பட்ட சோகம் – 12 பேர் பலி!
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் நடந்த பேருந்து விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர், மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
வடக்கு சுமத்ராவின் மேடானில் இருந்து ஜகார்த்தாவுக்கு 34 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
படாங் நகரில் உள்ள ஒரு பேருந்து முனையத்திற்கு அருகே ஒரு கீழ்நோக்கிச் செல்லும் சாலையில் செல்லும்போது பேருந்து பிரேக் செயலிழந்து விபத்தில் சிக்கியதாக போக்குவரத்து காவல்துறை இயக்குனர் ரெசா சாய்ருல் அக்பர் சித்திக் தெரிவித்துள்ளார்.
அவசர சேவைகள் இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் அருகிலுள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றன.
விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய போலீசார் தற்போது சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 19 times, 1 visits today)





