ஐரோப்பா

புத்தாண்டு தினத்தில் பிரான்ஸ் தலைநகரில் ஏற்பட்ட விபரீதம் – 6 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

rue Picard வீதியில் உள்ள ஏழு அடுக்கு கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தில் பிற்பகல் 1 மணிக்கு தீ பரவ ஆரம்பித்தது.

தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 90 வரையான தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்த போராடினர்.

இச்சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் பலத்த காயமடைந்து அவசரப்பிரிவு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தீ பரவலுக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!