ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் தினத்தில் இடம்பெற்ற விபரீதம் – பொதுமக்கள் வெளியேற்றம்!
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் அமைந்துள்ள கேரவன் பூங்காவில் உயரமான கிரேன் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.
நேற்று வீசிய புயல் காரணமாக சுமார் 30 டன் எடையுள்ள கிரேன் சரிந்து விழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு கூடியிருந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குறித்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த இரண்டு தீயணைப்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், பாதுகாப்பு காரணம் கருதி முன்னெச்சரிக்கையாக அருகில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





