அமெரிக்காவில் குடும்ப தகராறால் நிகழ்ந்த சோகம் – மூவர் பலி!
அமெரிக்காவில் உள்ள ரோட் தீவு ஹாக்கி மைதானத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தாக்குதல்தாரியும் மேற்படி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.





