கனடாவில் காட்டுத்தீயை அணைக்க சென்ற விமானிக்கு நேர்ந்த துயரம்
கனடாவின் மேற்குப் பகுதியில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதில் பயணித்த விமானி உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினத்திலிருந்து அந்த ஹெலிகாப்டரைக் காணவில்லை என்று கூறப்பட்டது. ஆல்பர்டா மாநிலத்தின் Haig ஏரிக்கு அருகில் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தீயணைப்புப் பணிகளின்போது அது நிலத்தில் மோதியதாகத் தெரிகிறது. அது குறித்து விசாரிக்கப்படுகிறது. ஹெலிகொப்டரில் 41 வயது விமானி மட்டுமே இருந்தார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார். விமானி நாட்டிற்கு ஆற்றிய சேவையை ஒருபோதும் மறக்கப்போவதில்லை என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ கூறினார்.
காட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளின்போது உயிரிழந்த 3ஆவது நபர் அந்த விமானியாகும். கடந்த வாரம் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.