ஐரோப்பா

வெளிநாடொன்றில் செல்பி எடுக்கும்போது ரஷ்ய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

வெளிநாடொன்றிற்கு சுற்றுலா சென்றிருந்த ரஷ்ய இளம்பெண்ணொருவர், செல்பி எடுக்கும்போது 170 அடி உயரமுள்ள மலையுச்சியிலிருந்து கீழே விழுந்தார்.

ரஷ்யாவிலுள்ள Sochi என்னும் நகரில் அழகுக்கலை நிபுணராக பணியாற்றிவந்தவர், Inessa Polenko (39). சமீபத்தில் ஜார்ஜியா நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார் Inessa.

கருங்கடலுக்கு அருகே அமைந்துள்ள மலை ஒன்றில் ஏறிய Inessa, மலையுச்சியில் நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது கால் தடுக்கி, 170 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

வெளிநாடொன்றில் செல்பி எடுக்கும்போது அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் | Tourist Plunges Death Selfie Viewing Platform

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற, பிரபல சுற்றுலாத்தலமான Sochi நகரிலேயே, இன்று அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலகம் முழுவதும் இதுவரை சுமார் 400 பேர் இதுபோல செல்பி எடுக்க முயலும்போது விபத்துக்குள்ளாகியுள்ளார்கள் அல்லது உயிரிழந்துள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் 20 வயதுகளிலிருக்கும் இளம்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!