இலங்கையில் அதிகாலையில் விபரீதம் – சுற்றிவளைப்பிற்கு சென்ற அதிகாரி சுட்டுக்கொலை
வெலிகம, ஜம்புரேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழு மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வு பிரிவின் சார்ஜன்ட் என தெரியவந்துள்ளது.
கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று அதிகாலை 2 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று வான் ஒன்றில் ஜம்புரேகொட பிரதேசத்திற்கு வந்துள்ளதுடன், சில குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு சுட்டுக்கொல்லப்பட்ட சார்ஜன்ட் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரின் கால்களில் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் காயம் ஏற்பட்டது.
தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய விசேட பொலிஸ் குழுவொன்று இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.