இந்தியாவில் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபரீதம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் பலி!
உத்தரபிரதேச மாநிலம் புலந்திஷர் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெடிப்புச் சம்பவத்தின் போது வீட்டினுள் சுமார் 19 பேர் இருந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு மாதத்திற்கு முன்பு புலந்திஷர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.
(Visited 33 times, 1 visits today)





