அமெரிக்காவில் பாதையில் கிடந்த கட்டையால் நேர்ந்த விபரீதம் : ஒருவர் பலி!

அமெரிக்காவில் இன்று (14.10) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
நியூ ஜெர்சியில் உள்ள போர்டன்டவுன் அருகே நியூ ஜெர்சி ரிவர் லைன் லைட் ரெயிலின் தண்டவாளத்தின் குறுக்கே மரக்கட்டை ஒன்று கிடந்த நிலையில் அதனுடன் மோதுண்டு ரயில் விபத்தில் சிக்கியுள்ளது.
இதன்காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகளுக்காக சாலைகள் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 15 times, 1 visits today)