நியூசிலாந்தில் 100 காந்தங்களை விழுங்கிய சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த காந்தங்களை விழுங்கிய 13 வயதுச் சிறுவனுக்கு அவசர அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இணையம் மூலம் வாங்கிய 100 சக்திவாய்ந்த காந்தங்களை சிறுவன் விழுங்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டார்.
இதன்போது X-ray பரிசோதனையில், காந்தங்கள் குடலில் ஒட்டிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடி அறுவைச் சிகிச்சையின் பின்னர் எட்டு நாள் சிகிச்சைக்குப் பின் சிறுவன் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் சென்றார் என்று தெரிவிக்கப்படுகிறது.
சிறுவன் விழுங்கிய இந்த வகை சக்திவாய்ந்த காந்தங்கள் நியூசிலாந்தில் 2013ஆம் ஆண்டிலிருந்தே தடை செய்யப்பட்டுள்ளன.
(Visited 9 times, 9 visits today)




