ரஷ்யாவில் போர் எதிர்ப்பு பாடலை பாடிய இளம் பாடகிக்கு நேர்ந்த துயரம்!
போர் எதிர்ப்பு பாடலை பாடிய இளம் பாடகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நீட்டித்து ரஷ்ய நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
லோகினோவா (Loginova) என்ற பிரபல பாடகி, அக்டோபர் மாதம் தனது நிகழ்ச்சியின் மூலம் போர் எதிர்ப்பு பாடலை பாடியிருந்தார்.
இந்நிலையில் பொது ஒழுங்கை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அப்போது அவரை 13 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குறித்த 13 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அவர் மீளவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது தண்டனை காலத்தை மேலும் நீடித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் உக்ரைனில் நடந்த போர் தொடர்பாக பேச்சுரிமையை மீறியதற்காக அவருக்கு எதிராக நீதிமன்றம் தண்டனை வழங்கியமை குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.





