பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி ஒருவருக்கு நேர்ந்த துயரம் -வாகனத்துக்குள் சிக்குண்டு பலி

பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி ஒருவர் கனரக வாகனம் ஒன்றில் ஏற முற்பட்டு அதே வாகனத்துக்குள் சிக்குண்டு உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸில் பா-து-கலே மாவட்டத்தின் Marck எனும் நகர்ப்பகுதியில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியா சென்றடையவேண்டும் எனும் முனைப்புடன் அகதி ஒருவர் ஓடிக்கொண்டிருக்கும் கனரக வாகனம் மீது பாய்ந்து ஏற முற்பட்டுள்ளார்.
இதன் போது அவர் தவறி விழுந்து வாகனத்தின் சக்கரங்களுக்குள் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர் எரிட்டேரியா நாட்டைச் சேர்ந்த அகதி என தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டில் ஆபத்தான கடற்பயணங்களினால் மட்டும் 78 அகதிகள் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 18 times, 18 visits today)