திருகோணமலையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த துயரம்!
திருகோணமலை- கல்யாணபுர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்றிரவு (07) இடம்பெற்றுள்ளது.
கோமரங்கடவல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் கல்யாணபுர பகுதியில் வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானார்.
இதனையடுத்து கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,
மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசேட கடமை நிமிர்த்தம் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், அப்பகுதியூடாக பயணித்த மோட்டார் வாகனத்தை நிறுத்த வீதிக்கு வந்துள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கள் பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும், மோட்டார் சைக்களின் சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவத்தில், களுத்துறை-பொல்கம்பல ,கெவிடியாகல பகுதியைச் சேர்ந்த கே.வீ.இந்திக (47வயது) என்ற நபரும், 52 வயதுடைய பொலிஸ் அதிகாரியும் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





