ஜேர்மனியில் இசை விழாவில் நடந்த விபரீதம் : 30 பேர் வைத்தியசாலையில்!
ஜேர்மனியில் நடந்த இசை விழாவில் பெர்ரிஸ் சக்கரம் தீப்பிடித்து எரிந்ததில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
லீப்ஜிக்கிற்கு அருகிலுள்ள ஸ்டோர்ம்தாலர் ஏரியில் உள்ள ஹைஃபீல்ட் திருவிழாவில், இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெர்ரிஸ் சக்கரத்தில் இருந்த இரண்டு கோண்டோலாக்கள் தீப்பிடித்து எரிந்தன, ஆனால் தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது அவர்கள் நலமாக இருப்பதாகவும் விழா குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





