பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது!

பதுளை-கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளைக்கும் பெரகலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பல மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மண்சரிவு காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்த வீதிப் பகுதிக்கு இடையில் 03 இடங்களில் பிரதான வீதியில் மண் மற்றும் கற்கள் வீழ்ந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக இன்று (21) பிற்பகல் 2.30 மணி முதல் இவ்வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக மண் அகற்றும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)