சீனாவுடனான வர்த்தகப் போர் – அமெரிக்காவின் பொருளாதாரம் ஆட்டங்காணும் என எச்சரிக்கை

சீனாவுடனான வர்த்தகப் போரால் கடும் அமெரிக்க துறைமுகங்கள் பாதிப்புக்குள்ளாகக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மேற்குக் கரையில் உள்ள துறைமுகங்களிலேயே இந்த பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து வரும் பொருட்களின் அளவு குறையக்கூடும் என்பதால் கப்பல் போக்குவரத்து கணிசமாகக் குறையலாம் என்று துறைமுகத் தலைவர்கள் கூறுகின்றனர்.
இதனால் வேலைகள் பாதிக்கப்படலாம். விலைவாசி அதிகரிக்கக்கூடும். அமெரிக்காவின் பொருளாதாரம் ஆட்டங்காணும் என்று முன்னுரைக்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் சீனாவிலிருந்து வரும் பல மில்லியன் கணக்கான பொருள்கள் ஆக்லந்து துறைமுகத்தில் முதலில் வந்திறங்கும்.
அண்மையில் போடப்பட்ட 100 சதவீதத்திற்கும் அதிகமான வரிகள் அந்தப் போக்குவரத்தை மெதுவடையச்செய்யும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
(Visited 2 times, 2 visits today)