கிரேக்கத்தில் பணிப்புறக்கணிப்பில் இறங்கிய தொழிற்சங்கள் – முடங்கிய இயல்பு வாழ்க்கை!
கிரேக்கத்தில் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் தொழிலாளர் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களை பொது மற்றும் தனியார் துறை தொழிலாளர்கள் எதிர்த்தமையால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
24 மணி நேர வேலைநிறுத்தத்தின் போது ஏதென்ஸில் எந்த டாக்சிகளும் ரயில்கள் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டதுடன் தள்ளுவண்டிகள் மற்றும் பிற வாகனங்கள் குறைவாக வேலை செய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தொழிலாளர்களின் குறித்த வேலைநிறுத்தமானது பள்ளிகள், நீதிமன்றங்கள், பொது மருத்துவமனைகள் மற்றும் நகராட்சிகள் உட்பட நாடு முழுவதும் பாதித்ததாக கூறப்படுகிறது.
புதிய சட்டத்திருத்தங்களுக்கு அமைய 13 மணிநேரமாக ஷிப்ட்களை நீட்டிக்கக்கூடிய வகையில் வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலை நேரம் வாரத்திற்கு 48 மணிநேரமாகக் குறைக்கப்படும், வருடத்திற்கு அதிகபட்சமாக 150 கூடுதல் நேர நேரங்கள் அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடைமுறையானது முதலாளிகளால் தொழிலாளர் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்குகின்றன என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





