போர்த்துக்களில் பணிப்புறக்கணிப்பில் இறங்கிய தொழிற்சங்கங்கள்!
போர்த்துக்களின் இரண்டு முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புகள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், இன்று விமான மற்றும் ரயில் போக்குவரத்திற்கு கடுமையான இடையூறுகள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான போர்த்துகீசிய தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு தொழிலாளர் குழுக்கள், மத்திய அரசாங்கம் வேலைவாய்ப்பு சட்டங்களில் முன்னெடுக்கவுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.
அரசாங்கம் கொண்டுவரவுள்ள மாற்றங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
அதே நேரத்தில் பொருளாதாரத்தை மேலும் நெகிழ்வானதாக்கவும் வளர்ச்சியைத் தூண்டவும் புதிய மாற்றங்கள் தேவை என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட மாற்றங்களில் நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதை எளிதாக்குதல், பொருளாதாரத்தின் கூடுதல் துறைகளில் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை மறுத்தல், பிறந்த குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் கால அளவை கட்டுப்படுத்தல் உள்ளிட்டவை முக்கியம் பெறுகிறது.





