புதுடெல்லி நகரை பாதித்துள்ள நச்சு காற்று – செயற்கை மழையை ஏற்படுத்துமாறு கோரிக்கை
இந்தியாவின் புதுடெல்லி நகரை பாதித்துள்ள நச்சு காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் செயற்கை மழையை ஏற்படுத்துமாறு டெல்லி மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
காற்றின் தரக் குறியீட்டில், சராசரி காற்றின் தர மதிப்பு 100-க்கும் குறைவாக இருக்க வேண்டும், ஆனால் டெல்லியில் இதன் மதிப்பு 1000ஐத் தாண்டியுள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக தலைநகர் டெல்லியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஏற்படும் கடுமையான சுகாதார அச்சுறுத்தல்களை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
செயற்கை மழை மூலம் தற்போதைய காற்று மாசுபாட்டை குறைக்க முடியும் என்றும், வளிமண்டலத்தில் உள்ள மாசுகள் கழுவப்படும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
டெல்லியின் நிலைமை ஆபத்தான நிலையில் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
இதற்கிடையில், காற்று மாசுபாடு காரணமாக சாலைகள் சரியான பார்வை இல்லாததால் டெல்லி நகரின் பல சாலைகளில் பல போக்குவரத்து விபத்துகளும் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் ஒவ்வொரு குளிர்காலத்திலும் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது, இதற்கு முக்கிய காரணம் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் விவசாய நிலங்களை எரிப்பதுதான் என குறிப்பிடப்படுகின்றது..