இலங்கை பொலிஸாரின் உத்தரவினால் அதிருப்த்தியில் சுற்றுலா பயணிகள்
பிரபலமான சுற்றுலாத் தலத்தில் இரவு 10 மணிக்கு இசையை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஒரு வெளிநாட்டுப் பெண், இரவு 10 மணிக்கு இசை வாசிப்பதை நிறுத்துமாறு பொலிஸார் தனக்குத் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
புதிய ஜனாதிபதி இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தால், அது இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு மோசமான சூழ்நிலையாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
இலங்கை சுற்றுலாத் துறையின் மூலம் மில்லியன் கணக்கான டொலர்களை சம்பாதித்து வரும் நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் பொருத்தமற்றவை என அவர் காணொளியில் குறிப்பிடுகிறார்.
அந்த இடத்தில் பல சுற்றுலாப் பயணிகள் இருப்பதை வீடியோ காட்டுகிறது. எனினும் சுற்றுலா தலம் தொடர்பாக தகவல் வெளியிடப்படவில்லை.