செய்தி விளையாட்டு

10 ஆண்டுகளுக்கு பின் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து

இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக வங்காளதேசம் மற்றும் நியூசிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

அதன்படி வரும் செப்டம்பர் மாதம் நியூசிலாந்து அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

இதன் மூலம் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 10 ஆண்டுகளுக்கு பின் வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இறுதியாக கடந்த 2013ஆம் ஆண்டு வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு முழு தொடரில் விளையாடியது. அதில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 கொண்ட முழு தொடரில் விளையாடியது.

அதன் பிறகு 10 வருடங்கள் கழித்து தற்போதுதான் ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட செல்கிறது.

ஒருநாள் தொடர் முடிவடைந்த பிறகு இரு அணிகளும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கின்றன. அதன் பின் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

இவ்விரு அணிகளுக்கான முதலாவது ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. 3 போட்டிகளும் மிர்புர் நகரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

 

(Visited 12 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி