ஜெர்மனியில் கடுமையாகும் சட்டம் – நாடு கடத்தப்படும் அபாயம்
ஜெர்மனியில் புகலிடம் பெற்றவர்களுக்கு அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் புகலிடம் பெற்றவர்கள் பாரிய வன்முறை நடவடிக்கைகளில் ஈடுப்படுவார்களானால், அவர்களை நாடு கடத்துவது தொடர்பாக அரசாங்கம் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் அண்மைக்காலங்களாக சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த அகதிகள் பாரிய வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிரியா நாட்டை சேர்ந்த குற்றவாளிகள் கத்தி குத்து தாக்குதல் சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களிளும் இவ்வாறே கத்திக்குத்து சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாட்டை சேர்ந்த அகதிகள் இவ்வாறு குற்றவியல் சம்பவங்களில் ஜெர்மனியில் ஈடுப்படும் பொழுது அவர்களை நாட்டை விட்டு கடத்த வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
ஜெர்மனியின் தற்போதைய கூட்டு அரசாங்கத்துக்கு பல இடங்களில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான் நாட்டு குற்றவாளிகளை ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்புவதில் சிரமம்ம ஏற்படுவதன் காரணத்தினால் ஜெர்மனியின் அரசாங்கமானது உஸ்பேகிஸ்தான் நாட்டுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.