ஜெர்மனியில் உதவி பெறுவோருக்கு கடுமையாகும் சட்டம்!
ஜெர்மனியில் சமூக உதவி பெறுவோருன் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நிலவும் பணி வெற்றிடங்களுக்கு சமூக உதவி நிதியை பெறுவோரை பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டால் 50 கிலொமீற்றர் தொலைவு என்றாலும் செல்ல வேண்டும் என கட்டாய நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.
தேவை ஏற்படுவோர் வீட்டினை மாற்றி அருகில் செல்லவும் வாய்ப்பு வழங்கப்படும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சமூக உதவி வசதியினை பலர் தவறாக பயன்படுத்தி, வேலைக்கு செல்வதை தவிர்த்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இவ்வாறான நிலையில் சமூக உதவி வழங்கும் திணைக்களத்தினால் வழங்கப்படும் பணிக்கு செல்லாதவர்களுக்கு, சமூக நிதி கொடுப்பனில் 30 வீதத்தினை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் வழங்கப்படும் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆபிரிக்க நாடுகளிலிருந்து பெருந்தொகையான அகதிகள் நாட்டுக்குள் வருவதாகவும் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.