அமெரிக்காவில் கடும் சூறாவளி : இருவர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கான்ரோவில் நேற்று கடும் சூறாவளி புயல் தாக்கியது. மேலும், இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு ஒன்று சரிந்து விழுந்து தரைமட்டமானது. குறித்த வீட்டில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் தங்கியிருந்த நிலையில், அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 7 பேரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)





