அமெரிக்காவின் இரண்டு மாநிலங்களை தாக்கிய சூறாவளி : 16 பேர் பலி!

அமெரிக்காவின் இரண்டு மாநிலங்களின் சில பகுதிகளை சூறாவளி தாக்கியதில் குறைந்தது 16 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.
செயிண்ட் லூயிஸ் நகரில் ஐந்து பேர் உட்பட மிசோரியில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், கென்டக்கியில் 09 பேர் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கென்டக்கி மாநிலத்தின் தென்கிழக்கில் உள்ள லாரல் கவுண்டியில் இன்று (17.05) அதிகாலை சூறாவளி தாக்கியுள்ளது. இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் 5,000 கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், கூரைகள் அழிக்கப்பட்டதாகவும், மின் கம்பிகள் அறுந்து விழுந்ததாகவும் மிசோரி அதிகாரிகள் தெரிவித்தனர்.
செயிண்ட் லூயிஸில் சுமார் 100,000 சொத்துக்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, மேலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தேடுதல் நடத்தப்பட்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.