கொடுமைப்படுத்துதல், துன்புறுத்துதல் குற்றச்சாட்டில் சிக்கிய TikTok உயர் அதிகாரி
ஜெர்மனியில் உள்ள TikTok இன் பொது மேலாளர் டோபியாஸ் ஹென்னிங், பாரிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
மத்திய ஐரோப்பாவில் செயலியின் செயல்பாடுகளுக்குப் பொறுப்பான மூத்த TikTok நிர்வாகி விடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
வாய்மொழி துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நிறுவனம் தனது நடத்தை குறித்து விசாரணையை தொடங்குவதால், விடுப்பில் சென்றுள்ளார் என Fast நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த அதிகாரியால் பெண் ஊழியர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் பணிச்சூழலுக்கு தலைமை தாங்கியதாக தெரியவந்துள்ளது.
துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சில தொழிலாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சுமார் 200 பேர் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது, இருப்பினும் ஊழியர்களின் எண்ணிக்கை அதன் பின்னர் குறைந்ததாக நம்பப்படுகிறது.
நிறுவனத்திற்குள் சக்தி வாய்ந்தவர் என கூறப்படும் ஹென்னிங்கின் பின்விளைவுகளை அஞ்சும் பல ஊழியர்கள் தங்கள் பெயரை வெளியிடாமல் அவர் குறித்து குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஜேர்மன் பத்திரிகையான Der Spiegel, ஏப்ரல் பிற்பகுதியில் ஹென்னிங்கிற்கு எதிரான கொடுமைப்படுத்துதல் குற்றச்சாட்டுகள் குறித்து முதலில் தகவல் வெளியிட்டிருந்தது.