சிந்தூர் தாக்குதலில் தடை செய்யப்பட்ட அமைப்பின் முக்கிய தளபதி கொலை

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் பயங்கரவாதத் தலைமையகங்கள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.
பஹாவல்பூரில் இந்தியத் தாக்குதல்களில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ரவுஃப் அசார் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
IC-814 விமான கடத்தல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவன் அப்துல் ரவுஃப் அசார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)