உணவுக்குப் பதில் பற்பசை, சலவை தூள் – ஊழியர்களை பணிநீக்கம் செய்த Meta
 
																																		Meta நிறுவனத்தின் உணவுப் பற்றுச்சீட்டை தவறாக பயன்படுத்தியவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பற்றுச்சீட்டை கொண்டு உணவுக்குப் பதில் பற்பசை, சலவை தூள் ஆகிய பொருள்களை வாங்கிய ஊழியர்கள்
அந்தப் பற்றுச்சீட்டை மற்றவர்களுடன் பகிர்வது, வரம்பை மீறி செலவு செய்வது ஆகிய விதிமீறல்களையும் சிலர் ஈடுபட்டதாக Meta நிறுவன ஊழியர்கள் கூறினர்.
வேலையைவிட்டு நீக்குவதற்கு முன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை என செய்தி நிறுவனம் தெரிவித்தது.
Meta ஊழியர்களுக்கு மதிய வேளை உணவிற்கு 25 டாலரும் காலை வேளை உணவிற்கு 20 டாலரும் இரவு வேளை உணவிற்கு 25 டாலரும் பற்றுச்சீட்டாக வழங்கப்படுகிறது. Grubhub எனும் தளத்தில் அதைக் கொண்டு உணவு வாங்கலாம்.
அந்தப் பற்றுச்சீட்டைக் கொண்டு உணவு அல்லாத மற்ற பொருள்களை வாங்கிய அல்லது வரம்பை மீறி செலவு செய்த சுமார் 30 ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
 
        



 
                         
                            
