இங்கிலாந்தின் இன்றைய வானிலை!

இங்கிலாந்தின் சில பகுதிகளில் வெப்பநிலையானது 14 14 டிகிரி செல்சியஸாக பதிவாகும் என met office தெரிவித்துள்ளது.
1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினம் வெப்பமானதாக இருக்கும என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் வடக்கு ஸ்காட்லாந்தில் பனியைக் காணக்கூடிய மலைகளைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகள் லேசான மற்றும் மேகமூட்டத்துடன் தூறல் மழையுடன் இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
1920 இல் வெப்பநிலை 15.6C ஐ எட்டியபோது பதிவாகிய வெப்பமான கிறிஸ்துமஸ் தினத்தை விட வெப்பநிலை அதிகமாக இருக்க வாய்ப்பில்லை என்ற போதிலும், 2016 ஆம் ஆண்டிலிருந்து வெப்பமான வானிலை நிலவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)