இலங்கை பங்கு சந்தையின் இன்றைய நிலவரம் : 16000 புள்ளிகளை கடந்த பங்கு சுட்டெண்!
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (02) 16,000 புள்ளிகளைக் கடந்தது.
இலங்கையின் மூலதனச் சந்தை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகக் கருதப்படுகிறது.
இதன்படி, அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 403.94 அலகுகளால் அதிகரித்து 16,348.55 அலகுகளாகப் பதிவானது.
முந்தைய வர்த்தக தினத்துடன் ஒப்பிடுகையில் இது 2.53% வளர்ச்சியாகும்.
இதனிடையே இன்று ரூ. 12.86 பில்லியனாக மிகப்பெரிய பரிவர்த்தனை புரள்வு பதிவாகியுள்ளது என்பது சிறப்பு.
(Visited 1 times, 1 visits today)