இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 12.9 வீதத்தினால் வலுவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆரம்பம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி வரையில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இவ்வாறு வலுவடைந்துள்ளது.
இதன்படி இன்றைய நாணய மாற்று விகிதம் வெளியாகியுள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 326.6292 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 312.5034 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





