செய்தி வாழ்வியல்

அதிகமாக யோசிப்பதை நிறுத்த ஜப்பானியர்கள் பின்பற்றும் வழிமுறை

நம்மில் பலர் நிகழ்காலத்தில் இருக்கவே பல சமயங்களில் தவறிவிடுகிறோம். ஒரு சின்ன விஷயம் நம் கண் முன்னே நடந்தால் கூட, அதனை பெரியதாக கருதி அதிகமாக யோசித்து, இல்லாத ஒரு சோகத்தை நாமே உருவாக்கி விடுவோம். இது நமக்கு பதற்ற உணர்வை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தையும் கூட்டும் செயலாக இருக்கும். இதனை எப்படி நிறுத்துவது என்று பலருக்கு தெரியாது. இதை சமாளிக்க ஜப்பானியர்கள் சில ஸ்மார்ட்டான வழிகளை கண்டுபிடித்து வைத்துள்ளனர். அவை என்னென்ன தெரியுமா?

இலக்குகளை நிர்ணயித்தல்:

இக்கிகை என்பது ஒரு ஜப்பானிய வாழ்வியல் முறையாகும். இதன்படி, நாம் மகிழ்ச்சியாக வாழ எது நமக்கு பிடித்திருக்கிறது, எதை நான் விரும்புகிறோம், இந்த உலகிற்கு என்ன தேவைப்படுகிறது, நமக்கு எதனால் வெகுமதி கிடைக்கிறது, நம் வாழ்வின் நோக்கம் எது என்பதை எழுதி வைக்க வேண்டும். இப்படி செய்து அதை அடிக்கடி படித்து வந்தால் நம்முடைய அதிகமாக யோசிக்கும் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். மேலும், மன அமைதியும் கிடைக்கும்.

நிறைவற்றதை ஏற்றுக்கொள்ளுதல்:

வாழ்வில் அனைத்துமே நமக்கு நிறைவான உணர்ச்சியை கொடுத்து விடாது என்பதை ஏற்றுக்கொள்ளும் தத்துவம் இது. இதை முழுமையாக தெரிந்து கொண்டால் நம் வாழ்வில் முழுமையற்றதாக, உடைந்து கிடக்கும் விஷயத்தை கூட முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியும். வாழ்வு கணிக்க கூடியதாக இருப்பதில்லை என்பதையும் இது உணர்த்தும். இந்த ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், வாழ்க்கையை அழகாக கடந்து செல்லவும் உதவும்.

இயற்கையுடன் இணைதல்:

நமது மனநிலை கொஞ்சம் தொய்வாக இருக்கும் நேரத்தில், “வெளியில் சென்று ஒரு வாக்கிங் போயிட்டு வா” என்று பிறர் கூறுவதை கேட்டிருப்போம். இதுவும் அதுபோன்ற ஒரு முறை தான். அதிகமாக யோசித்துக் கொண்டிருக்கும் போது, இயற்கை எழில் சூழ்ந்த ஒரு இடத்திற்கு சென்று அங்கு இருக்கும் விஷயங்களை கவனிக்க வேண்டும். சுற்றி இருக்கும் ஒளி-ஒலிகள், வாசனை உள்ளிட்டவற்றை கவனிக்க வேண்டும். சிறிது நேரம் மூச்சுப் பயிற்சி செய்தால், அதிகமாக யோசிப்பதை நாம் நிறுத்துவதுடன் மன அழுத்தத்தையும் குறைக்கலாம்.

தியானம்:

அதிகமாக யோசிக்கும் நேரத்தில் ஜப்பானியர்கள் Zazen என்ற ஒரு தியான முறையில் கடைபிடிக்கின்றனர். இதை செய்ய முதலில் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு அப்படியே அமைதியாக உட்கார வேண்டும். பின்பு, மென்மையாக மூச்சை இழுத்து விட்டு என்ன யோசனை தோன்றினாலும் அதனை இப்படி யோசிக்க வேண்டும். இந்த முறையில் உங்கள் யோசனைகளுடன் நீங்கள் ஓட்டுக்கள் இல்லாமல் இருக்க முடியும். அதிகமாக இருப்பதை நிறுத்த இது ஒரு உபயோகரமான வழியாகும்.

சிறிய முன்னேற்றங்கள்:

இந்த முறைக்கு, Kaizen என்று ஜப்பானியர்கள் பெயர் வைத்துள்ளனர். நாம் பொதுவாக அதிகமாக யோசிக்கும் போது, “அடுத்து என்ன?” என்ற கேள்வி நமக்குள் நிலவிக் கொண்டே இருக்கும். இதை தவிர்த்து “அடுத்து என்ன என்று தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை, இப்போதைக்கு இந்த சிறிய மாற்றமும் போதுமானது” என்ற மனப்பக்குவத்தை, இந்த முறை மூலம் கொண்டுவர முடியும். இதனால் தினந்தோறும் வாழ் சிறு சிறு முன்னேற்றங்கள் ஏற்படும்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி