செய்தி

மூளை கூர்மையாக வேலை செய்ய… கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்!

நமது உடலின் தலைமைச் செயலகமாக செயல்படும் மூளை, உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மூளை சரியாக இயங்கினால் மட்டுமே நம்மால் இயல்பாக, ஆரோக்கியமாக இருக்க முடியும். அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது மூளை கூர்மையாக வேலை செய்ய, உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைச் செய்வது அவசியம்.

மனிதர்கள் எல்லோருக்கும் மூளை அமைப்பு என்பது ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் அது செயல்படும் விதத்தை வைத்துத்தான் ஒருவர் புத்திசாலியா, அறிவாளியா என்பது மதிப்பிடப்படுகிறது. மூளை சிறப்பாக செயல்பட்டால் ஒருவர் அறிவாளி என்றும், அது சரியாக செயல்படாவிட்டால் மந்தமான மூளை என்றும் அடையாளம் காணப்படுகிறார்.

தினமும் நடக்கும் பல ஆயிரக்கணக்கான நிகழ்வுகளையும், நாம் படித்து அறியும் தகவல்களையும், இன்னும் பிற பல்வேறு விஷயங்களையும், நமது மூளை உள்வாங்கி அதை நினைவில் வைத்துக் கொள்கிறது. நினைவாற்றல் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், சில பழக்கங்களை கடைபிடிப்பது அவசியம். சில உடல் செயல்பாடுகள் (Health Tips) மூளையை கூர்மையாக்கும்.

மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க இரவில் சில பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என நரம்பியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்தப் பழக்கங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை ரிலாக்ஸ் செய்து, உங்கள் மறதியை போக்கி, மூளையை கூர்மையாக்குகிறது.

ஆரோக்கியமான உணவு

நாம் உண்ணும் உணவு அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த சரிவிகித உணவாக இருக்க வேண்டும். கூடவே மூளைக்கு ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் உணவுகள் டயட்டில் இருக்க வேண்டும். மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடிய, புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகியவை நிறைந்த உலர் பழங்கள், மீன் உணவுகள் ஆகியவை தினமும் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வாதுமை பருப்பு பாதாம் போன்றவை, நினைவாற்றலை அதிகரிக்கும் மிகச்சிறந்த உலர் பழங்கள்.

மூளைக்கான பயிற்சி

முன்பெல்லாம், குழந்தைகள் வகுப்பில் தவறு செய்யும் போது, ஆசிரியர்கள் அவர்களை தண்டிக்க தோப்புக்கரணம் போடச் சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். காதுகளைப் பிடித்துக் கொண்டு போடும் தோப்புக்கரணத்தால், மூளை செல்கள் தூண்டப்பட்டு, மூளைக்கான ரத்த ஓட்டம் சீராகி, மூளை சுறுசுறுப்பாகும். மனம் ஒன்றுபட்டு, நினைவாற்றலும் செயல் திறனும் அதிகரிக்கும். கவனச் சிதறல்கள் நீங்கும். தோப்புக்கரணத்தின் மகிமை உணர்ந்து தான், அதனை மூளைக்கான யோகா என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமல்ல மூளை ஆரோக்கியத்திற்கும் அவசியம். உடல் செயல்பாடு இல்லை என்றால், மூளைக்கு சரியாக இல்லாமல், மூளை மந்தமாகி விடும். அதே போல் விளையாட்டுக்களும், மூளைக்கு புத்துணர்ச்சியை கொடுத்து, மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். மூளைக்கான இரத்த ஓட்டம் அதிகரிப்பதே இதற்கு காரணம்.

எளிய பானங்கள் உதவும்

யோகா பயிற்சி

நரம்பியல் நிபுணர்கள் உறங்கும் முன் யோகாசனங்களைப் பயிற்சி செய்வது, உங்கள் மூளை ஆரோக்கியமாக இருக்க உதவும் என்கின்றனர். இரவில் சிறிது நேரம் பிராணாயாமம் செய்வது, மன அழுத்தத்தை போக்கும். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவது, மூளை பாதுகாப்பாகவும், மன அழுத்தம் இல்லாமல் இருக்கவும் உதவும். யோகா பயிற்சிகளையும் மூச்சுப் பயிற்சிகளையும் செய்வதை வழக்கமாக்கிக் கொள்வது மூளையை திறம்பட செயல்பட வைக்கும். கவனச் சிதறல்கள் என்பதே இருக்காது.

புத்தகங்களை படிக்கும் பழக்கம்

புத்தகங்களைப் படிப்பதன் மூலம் அறிவாற்றல், படைப்பாற்றல் அதிகரிக்கும். டிஜிட்டல் யுகத்தில் புத்தகங்களோடு நேரத்தை செலவிடுவது நிம்மதியை தருவதாக இருக்கும். தனிமையில் புத்தகம் படிப்பது, மனதை ரிலாக்ஸ் செய்து 68% மன அழுத்தத்தை குறைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

திரை நேரத்தைக் கட்டுப்படுத்தவும்

எவ்வளவு சோர்வாக இருந்தாலும், பலர் இரவில் மொபைலில் நீண்ட நேரம் நேரத்தை செலவிடுவார்கள். மொபைல் ஒளி, மூளையின் ஆற்றலை பாதிக்கிறது. திரையில் அதிக நேரம் செலவிடுவது கவனச் சிதறலை அதிகரிக்கிறது. திரைகளில் அதிக நேரம் செலவிடுவது மூளையின் செல்கள் பலவீனமடை வழிவகுக்கும் என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. திரை நேரத்தைக் குறைப்பதன் மூலம், உங்கள் மூளையை ரிலாக்ஸ் செய்து, புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கலாம்.

மூளைக்கான புதிர் விளையாட்டுக்கள்

உங்கள் மூளையைக் கூர்மையாகவும், ரிலாக்ஸ்டாகவும் வைத்திருக்க விரும்பினால், மூளைக்கு பயிற்சிகளை கொடுங்கள். உங்கள் மூளைக்கு பயிற்சி அளிக்க புதிர்களை தீர்த்து விளையாடுங்கள். புதிர்களைத் தீர்ப்பது மூளை செல்களுக்கு இடையே வலுவான இணைப்புகளை உருவாக்குகிறது. இது நினைவாற்றலை மேம்ப்படுத்துகிறது. இந்த பழக்கம் உங்கள் நினைவகத்தை நல்ல நிலையில் வைத்திருக்கும் நல்ல இரசாயனங்களை அதிகரிக்கிறது.

போதுமான தூக்கம்

உடல் வளர்ச்சிக்கும் (Health Tips) மன வளர்ச்சிக்கும், போதுமான அளவு ஆழ்ந்த தூக்கம் மிக மிக அவசியம். அப்போதுதான் மூளை சுறுசுறுப்பாக செயல்பட முடியும். தூக்கமின்மை, நினைவாற்றல் இழப்பு கவன சிதறல், ஆகியவற்றை ஏற்படுத்தும்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content