இலங்கை: ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்த ஸ்ரீதரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடல் இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இக்கலந்துரையாடலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.





