இங்கிலாந்தின் டெஸ்ட் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு (James Anderson) வழங்கப்பட்ட பட்டம்!
இங்கிலாந்தின் மிகச்சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு (James Anderson) நைட் பட்டம் (knighthood) வழங்கப்பட்டுள்ளது.
வின்ட்சர் கோட்டையில் (Windsor Castle) நடந்த விழாவில் இளவரசி ஆன் (Princess Anne) அவருக்கு இந்த கௌரவத்தை வழங்கினார்.
முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak), ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு (James Anderson) நைட் பட்டம் வழங்க பரிந்துரைத்திருந்தார்.
நைட் (knighthood) பட்டம் மூலம், அவர் சர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson) என்று அழைக்கப்படுவார்.
தற்போது 43 வயதாகும் ஆண்டர்சன் (James Anderson), கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபோது 704 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
அவர் இன்னும் உலகின் முன்னணி டெஸ்ட் விக்கெட் வீழ்த்தியவராக உள்ளார்.
உலகில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் முத்தையா முரளிதரன் (800) மற்றும் ஷேன் வார்ன் (708) ஆகியோருக்குப் அடுத்தப்படியாக ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson) உள்ளமை குறிப்பிடத்தக்கது.





