ஸ்வீடிஷ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு சம்பவம்! மூன்று துப்பாக்கிகள் மீட்பு

செவ்வாயன்று ஸ்வீடனில் 11 பேரைக் கொன்ற படுகொலையை நடத்தியதாக நம்பப்படும் நபருக்கு அடுத்ததாக மூன்று துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் போலீசார் தெரிவித்தனர்.
சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா (Risbergska) என்று அழைக்கப்படும் கல்வி நிறுவனத்தில், 20 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கற்கும் நிலையில்
அவர்களில் பெரும்பாலான மாணவர்கள் பரீட்சை முடிந்ததை அடுத்து தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
எனினும் ஒரு சில மாணவர்கள் கல்வி நிறுவனத்தில் தங்கியிருந்துள்ளனர் .
இந்த நிலையில் இந்த கல்வி நிறுவனத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 10 பேர் பலியானார்கள்.
அதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து அந்நாட்டு பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் மூன்று துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் போலீசார் தெரிவித்தனர்.