TIN கட்டாயமாக்கப்பட்டது
இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்) சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி, ஏதேனும் நிதி நிறுவனமொன்றில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல், கட்டிட வரைபடங்களுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற சேவைகளுக்கு TIN சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியமாகும்
அத்துடன் மோட்டார் வாகனப் பதிவு மற்றும் வாகன அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல், காணி அல்லது காணி உரிமத்தைப் பதிவு செய்தல் மற்றும் வணிகப் பதிவுகளை மேற்கொள்ளுதல் போன்ற சேவைகளுக்கு குறித்த சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றுதல், கடன் அட்டைகளை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் கட்டாயம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.




