TikTok நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களை குறைக்க நடவடிக்கை

TikTok செயலி உள்ளடக்கப் பாதுகாப்புப் பிரிவில் வேலை செய்யும் ஊழியர்களை அந்நிறுவனம் ஆட்குறைப்புச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
நிறுவனச் சீரமைப்பின் ஒரு பகுதியாக அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மூன்று தகவல்கள் கூறுகின்றன. நிறுவனத்தின் முடிவு குறித்து ஊழியர்களுக்கு இன்று தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா ஆகிய அனைத்துக்கும் ஆட்குறைப்பு ஒரே நாளில் தொடங்கும்.
TikTok செயலியின் எதிர்காலம் உறுதியற்று இருக்கும் நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உலகம் முழுதும் அச்செயலிக்கு 40,000 நம்பிக்கை, பாதுகாப்பு நிபுணர்கள் இருக்கின்றனர்.
(Visited 1 times, 1 visits today)