TikTok செயலி நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அரசாங்கம்!
TikTok செயலியை வைத்திருக்கும் சீன நிறுவனத்தை அமெரிக்க அரசாங்கம் எச்சரித்துள்ளது.
சீன நிறுவனமான “பைட் டான்ஸ்” TikTok செயலியை வைத்துள்ளது.
சீன நிறுவனம் TikTok செயலியை மற்றொரு சீன அல்லாத நிறுவனத்திற்கு விற்க வேண்டும், தவறினால் அமெரிக்காவில்TikTok தடை செய்யப்படும் என்று அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா அத்தகைய கோரிக்கையை விடுத்ததை TikTok செயலி உறுதிப்படுத்தியது.
இந்நிலையில் TikTok செயலியை பயன்படுத்தும் அமெரிக்கர்களின் தரவுகளை சீன நிறுவனம் வைத்திருப்பது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.





