இலங்கையின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை
 
																																		மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில், 50 மில்லி மீட்டருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலும் புத்தளம், காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினாலும் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும் என்று அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
 
        



 
                         
                            
