இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

இலங்கையின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடனான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலும் மற்றும் புத்தளம், காலி, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)