இலங்கையில் தேடப்படும் மூவர் நேபாளத்தில் கைது
இந்த நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த மேலும் மூவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரங்கன பிரசாத் குணசேகர என்ற வனதே சுட்டாங், கசுன் குமார கலிங்க சில்வா என அழைக்கப்படும் ஹினாடயான சங்க மற்றும் செல்வராஜா தனேசன் அல்லது கெசல்வத்தே தனேசன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்த நாட்டில் கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட குழுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கு எதிராக இந்நாட்டு நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகத்தின் பலம் வாய்ந்தவர்கள் என்று கருதப்பட்ட மூன்று பேர் ஓமானில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் முகமது சித்திக் என்பவர் முன்னணி போதைப்பொருள் வியாபாரி. முன்னதாக, சஞ்சீவ குமார சமரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ என்பவரும் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.
மேலும் இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய கோத்தா அசங்க என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.